Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் இடம் விற்பனைக்கு?? – மெசேஜால் வந்த வினை

காஷ்மீரில் இடம் விற்பனைக்கு?? – மெசேஜால் வந்த வினை
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (18:41 IST)
காஷ்மீர் சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து காஷ்மீரில் இடம் விற்பனைக்கு உள்ளது என்று போன்களில் வந்த மெசேஜால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் இந்தியாவை சேர்ந்த யார் வேண்டுமானாலும் குடியேறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை காஷ்மீர் மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே காஷ்மீரில் வசிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

தற்போது யார்வேண்டுமானாலும் காஷ்மீரில் குடியேறலாம் என்ற நிலையில் “காஷ்மீரில் லால் சவுக் ரோட்டில் 11.25 லட்ச ரூபாய்க்கு இடம் விற்பனைக்கு உள்ளது. காஷ்மீர் 370 நீக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே இடங்கள் உள்ளன” என்று ஒரு மெசேஜ் நிறைய பேருக்கு போனில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொள்ள ஒரு செல்போன் எண்ணும் உள்ளது.

விசாரித்ததில் அந்த எண் கொல்கத்தாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஈடன் ரியாலிட்டி குழுமத்தினுடையது என்று தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய அந்நிறுவனம் “எங்களுடைய ஸ்தாபனத்திற்கு காஷ்மீரில் நிலமோ, அலுவலகமோ கிடையாது. மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை மிகவும் குறைவானது என்பது ரியல் எஸ்டேட்டில் இருக்கும் அனைவருக்கும் பார்த்தாலே தெரியும்” என கூறியுள்ளனர்.

இந்த போலி மெசேஜை யார் அனுப்பினார்கள் என்பது தெரியாத நிலையில் சமூக வலைதளங்களில் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த செய்தி அனுப்பப்பட்ட நேரம் 9.50 என காட்டுகிறது. ஆனால் காஷ்மீர் குறித்த செய்தி வெளியானதே 11 மணிக்குதான். முன்கூட்டியே எப்படி இவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும்? எனவும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட டெயிலர்: போலீஸ் விசாரணை