கடந்த ஆடை விட இந்த ஆண்டு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக அளவிலான வேலை வாய்ப்பு வளர்ச்சி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு சதவீதம் குறைவாக இருக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது
2023 ஆம் ஆண்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் முதல் 28 மில்லியன் வரை இருக்கும் என்றும் பணவீக்கம் காரணமாக வேலை வாய்ப்பின்மை இந்த ஆண்டும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வேலை கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் என்றும் பணவீக்கம் மற்றும் பொருளாதாரம் மந்த நிலை சரியானால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உலக பொருளாதாரம் மந்தமாகும் என்று தெரிவித்துள்ள நிலையில் தற்போது வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.