இன்று ஒரே நாளில் 536 வாகனங்கள் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்திருப்பதாக காவல்துறையின தெரிவித்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து தற்போது பொதுமக்கள் பணிகளுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். அதேபோல் பொங்கல் விடுமுறைக்காக சுற்றுலா தலங்கள் சென்ற பொது மக்களும் வீடு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை முழுவதும் 190 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்ற நிலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது உள்பட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 359 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது போக்குவரத்து விதிமுறைகளை மீற வேண்டாம் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை மீறி போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.