Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடும் வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை.. ஜப்பானில் படுமோசம்.. அமெரிக்கா காரணமா?

கடும் வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை.. ஜப்பானில் படுமோசம்.. அமெரிக்கா காரணமா?

Siva

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (20:54 IST)
இந்திய பங்குச் சந்தை இன்று படுவீழ்ச்சியை சந்தித்த நிலையில் இந்தியாவை விட ஜப்பானில் மிக மோசமாக பங்குச்சந்தை சரிந்துள்ளதாகவும் சுமார் 20 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய பங்குச்சந்தை இன்று மதியம் 3.30 மணிக்கு வர்த்தகம் முடிவடைந்த போது 2222 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்தது. இதனால் இந்திய முதலீட்டாளர்கள் சுமார் 17 லட்சம் கோடியை இழந்து உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்தியா மட்டுமின்றி ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்ததாகவும் குறிப்பாக ஆசியாவில் ஜப்பானில் மட்டும் 12 சதவீதம் இன்று ஒரே நாளில் பங்கு சந்தை சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை அதிகமானது, அமெரிக்காவில் மந்தமான பொருளாதார நிலை ஆகியவை காரணமாக தான் பங்குச்சந்தை வர்த்தகர்கள் மத்தியில் பதட்ட நிலை ஏற்பட்டதாகவும் இதனால் தான் பங்குகளை அவசர அவசரமாக விற்றதால் பங்குச்சந்தை படுமோசமாக இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
 
அது மட்டும் இன்றி ஈரான் போர் காரணமாகவும் பங்குச்சந்தை மோசமாக இறங்கியதாகவும் கூறப்படுகிறது/ மொத்தத்தில் இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகளில் இன்று மிக மோசமாக பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை மீட்டு மருத்துவமனைக்கு செல்ல உதவிய மாவட்ட ஆட்சியர்!