Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை மீட்டு மருத்துவமனைக்கு செல்ல உதவிய மாவட்ட ஆட்சியர்!

Advertiesment
விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை மீட்டு மருத்துவமனைக்கு செல்ல உதவிய மாவட்ட ஆட்சியர்!

J.Durai

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (20:46 IST)
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  கலந்து கொண்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்‌ ஆர்.அழகு மீனா நிகழ்ச்சியை முடித்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
 
குமாரகோவில் சந்திப்பு அருகே  இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களும் பலத்த காயங்களுடன் சாலையோரம் படுத்திருந்தனர்.
 
அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர். அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள் தனது வாகனத்தை நிறுத்தி, விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்படும் என கருதி மனிதா பிமானத்தோடு அந்த இரு வாலிபர்களையும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக வாகனத்தில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
 
மேலும் உடனடியாக மருத்துவ கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது!