Publish Date: Tue, 30 Jul 2024 (09:56 IST)
Updated Date: Tue, 30 Jul 2024 (09:59 IST)
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்கு சந்தை உயர்ந்த நிலையில் இன்றும் மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் லேசான சரிவுடன் தொடங்கினாலும் சில நிமிடங்களில் பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 68 புள்ளிகள் உயர்ந்து 81,423 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 856 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட் , பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இண்ட் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.