Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் வைரஸ் பரவுதா? லாக் டவுனா? சீனாவிலிருந்து வீடியோ வெளியிட்ட தமிழ் டாக்டர்!

Tamil Doctor

Prasanth Karthick

, செவ்வாய், 7 ஜனவரி 2025 (09:44 IST)

சீனாவில் HMPV வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து அங்கிருந்து தமிழ் மருத்துவர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

 

 

தற்போது HMPV வைரஸ் பரவல் சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவிலும் நேற்று 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சீனாவில் பலர் பலியானதாகவும், அதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் அதை சீன ஊடகங்கள் மறைப்பதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து சீனாவில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

 

அதில் அவர் “சீனாவில் எந்த ஒரு வைரஸ் தொற்றும் புதிதாக பரவவில்லை. காலநிலை மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக ஏற்படும் வியாதிகளே தற்போது இருக்கின்றன. சீன அரசு எந்த ஒரு அவசர நிலையையும் பிரகடனப்படுத்தவில்லை. மக்கள் அனைவரும் இயல்பான வாழ்க்கையையே மேற்கொள்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரான்ஸ்பார்மரை பெயர்த்தெடுத்து திருடிய மர்ம நபர்கள்.. ஒட்டுமொத்த கிராமமே இருளில் தவிப்பு..!