Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை.. வேலை தேடிய நபருக்கு நேர்ந்த சோகம்..!

Advertiesment
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை.. வேலை தேடிய நபருக்கு நேர்ந்த சோகம்..!

Mahendran

, திங்கள், 20 ஜனவரி 2025 (15:57 IST)
அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு வேலை தேடிய இந்திய இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த ரவி தேஜா என்ற இளைஞர், முதுகலை படிப்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அங்கு அவர் தனது படிப்பை முடித்த பின்னர் அங்கேயே தங்கிருந்து வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில், வாஷிங்டன் அவென்யூ என்ற பகுதியில் அவர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் அவரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

இது குறித்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில், அவரது தந்தை செய்தியாளர்களிடம் இந்த தகவலை கூறினார்.

குடும்பத்திற்கு கிடைத்த முதல் கட்ட தகவலின் படி, ரவிதேஜா சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரியவந்தது. இதனை அடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கு.. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்..!