இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக தீர்ப்பு வெளியான நிலையில், உடனடியாக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரியை அதிகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக நட்பு நாடான இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி 50 சதவீதம் வரியை விதித்தது.
தேசிய அவசரக்கால நிலை சட்டத்தை தவறாக பயன்படுத்தி ட்ரம்ப் இந்த வரிகளை விதித்துள்ளதாக எதிர்கட்சிகள் ஆளும் அமெரிக்க மாகாணங்கள் ட்ரம்ப் மீது வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், வரிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் விடாக்கண்டனாய் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் ட்ரம்ப். இந்தியாவிற்கு வேண்டுமென்றே வரியை அதிகரிக்கவில்லை என காரணம் சொல்லியுள்ளார். உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசரநிலையை சமாளிக்கவே, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவை கட்டுப்படுத்த வரிகளை விதித்தோம் என்றும், தேசிய அவசரநிலை சட்டத்தை தான் சரியாகவே பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் முறையீடு செய்துள்ளார்.
Edit by Prasanth.K