அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வந்த 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்தி வைத்த உத்தரவை, அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
டிரம்ப் அதிபராக இருந்தபோது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவியை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், அதற்கு வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து பாஸ்டன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப்பின் உத்தரவு சட்டவிரோதமானது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு, டிரம்ப்புக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தத் தீர்ப்பின் மூலம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் அரசு நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.