முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மகன்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்த இரண்டு வார்த்தைகள் காரணமாக அவர்கள் இருவருமே பாகிஸ்தானில் நுழைய தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன்கள் சுலைமான் இம்ரான் கான் மற்றும் காசிம் இம்ரான் கான் ஆகிய இருவரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் "எதிர்ப்பு" மற்றும் "புரட்சி" என்ற இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், இதனால் அவர்கள் இருவருமே பாகிஸ்தானில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் இந்த இரண்டு வார்த்தைகள் இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதோடு, இந்த வார்த்தைகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை என்றும், எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது.
இம்ரான் கான் மகன்களின் சமூக ஊடகப் பதிவுகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாகிஸ்தானில் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருவருமே தற்போது வெளிநாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.