பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலி கராச்சியில் அவர் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்த நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதாகும் அஸ்கர் அலி கடந்த சில மாதங்களாக தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகைக் கொடுக்காத நிலையில் அவர் வீட்டின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தபோது சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இது தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தெரியவில்லை. அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸ் உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.