Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வராக வருவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை- முதல்வர் முக. ஸ்டாலின்

Advertiesment
chess stalin
, சனி, 17 டிசம்பர் 2022 (22:43 IST)
சென்னை சேத்துப்பட்டி எம்சிசி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற முன்னாள் மாணவர்ககள் சங்கக் கூட்டத்தில்  கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் தன் பள்ளிக் காலப் பருவத்தை நினைவு கூர்த்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘’அரசியலுக்கு வருவேன் என்றோ, ஒரு கட்சியின் தலைவராக வருவேன் என்றோ, ஒரு மாநிலத்திற்கு முதல்வராக வருவேன் என்றோ  நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள்.

இப்படி நான்  உயர்ந்த இடத்திற்கு வரக் காரணம் இந்தப் பள்ளியும் ஒரு காரணம். இந்தப்பள்ளியில், டாக்டர், வக்கீல் என எத்தனையோ பேரை உருவாக்கியுள்ளது. ஆனால் முதல் முதல்வராக என்னை உருவாக்கியுள்ளளது.

சென்னையில் கடந்த 1996 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயாராக இருந்தபோது, இந்தப் பள்ளிக்கு வந்து ஒருமுறை பேசினேன். அண்ணன் முத்து, அண்ணன் அழகிரி நான் ஆகிய மூவரும் இங்கு தான் படித்தேன். அரசியலில் இருந்தபடி, எங்களை கண்காணித்தவர் திரு முரசொலி மாறன். கல்வியில் முதன்மை மா நிலமாக இருக்கிறது. எத்தனையோ நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தால் அவை இந்த நிகழ்ச்சிக்கு ஈடாகாது ‘’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலியில் திடீர் காட்டுத்தீயில் 7 ஆயிரம் ஹெக்டேர் எரிந்து நாசம்