Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதியை சந்தித்து பேச போறேன்! வாரிசு தயாரிப்பாளர் வேதனை!

thunivu vs varisu
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:31 IST)
வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்காத நிலையில் உதயநிதியை சந்திக்க இருப்பதாக தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட தில் ராஜூ திட்டமிட்டுள்ள நிலையில் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் ஆரம்பம் முதலே சிக்கல் நிலவி வருகிறது.

அஜித் நடித்து எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படமும் பொங்கலுக்கே வெளியாகிறது. அந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தமிழகத்தின் பெருவாரியான திரையரங்குகளை துணிவு பிடித்ததால் வாரிசுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் தொடர் குழப்பம் நிலவி வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தில் ராஜூ “துணிவு படத்தின் விநியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென கேட்க போகிறேன். தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன விஜய்காந்த்…வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்