Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 28 February 2025
webdunia

''முடிசூட்டு விழா''....இதுதான் திராவிட மாடலின் சாதனை? - சசிகலா விமர்சனம்

Advertiesment
''முடிசூட்டு விழா''....இதுதான் திராவிட மாடலின் சாதனை? - சசிகலா விமர்சனம்
, புதன், 14 டிசம்பர் 2022 (16:31 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், தினகரன் தலைமையிலான 3 பிரிவாகப் பிரிந்துள்ள நிலையில், அவ்வப்போது, சசிகலா அறிக்கை வெளியிட்டும், ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார்.

இன்று உதயநிதி எம்.எல்.ஏ அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் நிலையில், சசிகலா ஓரறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து, அவர்களை  நம்பவைத்து, ஆட்சிக்கட்டியில் அமர்ந்து தற்போது 19 வது மாதத்தில் அடியெடித்து வைக்கும் இதே நேரத்தில், முடிசூட்டும் விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள். இதுதான் இந்த திராவிட மாடலின் சாதனையாக பார்க்கமுடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவினர் தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததை எல்லாம் சொல்லி மக்களுக்கு ஆசையைக் காட்டி வாக்குகளைப் பெற்றூ ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக இதைக் காலம் காலமாகச் செய்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்: உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த சென்னை மேயர் பிரியா