Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கு: அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது..!

Advertiesment
பாலியல் கடத்தல்

Mahendran

, புதன், 20 ஆகஸ்ட் 2025 (15:28 IST)
சிறுமிகள் உள்பட மனிதர்களை கடத்தல் கும்பலை குறிவைத்து அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் போலீசார் நடத்திய சோதனையில், பாலியல் தொழிலுக்காக பெண்களையும், சிறுமிகளையும் கடத்திய வழக்கில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஓமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில், 12 வயதுக்குட்பட்ட 10 பேர் உட்பட மொத்தம் 27 பேர் மீட்கப்பட்டனர். விசாரணையில், இவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டதும், சிலருக்கு ஊதியமே வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும், சிலர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட கெந்தகுமார் சௌத்ரி, ரஷ்மி அஜித் சமனி, அமித் சௌத்ரி, அமித் பாபுபாய் சௌத்ரி  மற்றும் மகேஷ்குமார் சௌத்ரி ஆகிய ஐந்து அமெரிக்க வாழ் இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஆள் கடத்தல், கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், விசா மோசடி, கொள்ளை மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ரூ.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெக மாநாட்டில் இன்னொரு விபத்து.. 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து கார் சேதம்..!