Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யாவை அடக்கதான் இந்தியாவுக்கு வரி விதித்தோம்!? - டொனால்டு ட்ரம்ப்!

Advertiesment
Donald Trump

Prasanth K

, புதன், 20 ஆகஸ்ட் 2025 (13:36 IST)

இந்தியா மீது 50 சதவீதம் அமெரிக்கா வரிவிதித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஷ்யாவை கட்டுப்படுத்துவதற்காக அதை செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

 

இந்தியா மீது 25 சதவீதம் வரியை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். ஆனால் அதே ரஷ்யாவிடம் வணிகம் செய்யும் சீனாவிற்கு இவ்வாறான வரி கெடுபிடிகள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில் “உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், ரஷ்யாவிற்கு மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதற்காகவும்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்தார். 

 

உலகம் முழுவதிலும் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட 7 மோதல்களை அமெரிக்கா சுமூகமாக பேசி நிறுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் வர்த்தகத்தை சக்திவாய்ந்த ஆயுதமாக பயன்படுத்தினார்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புலியாக பாயும் கர்நாடகமும், பூனையாய் பதுங்கும் திமுக அரசும்.. அன்புமணி கண்டனம்..!