கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மனைவி, போலி பாஸ்போர்ட் மூலம் துருக்கிக்கு தப்பி சென்று அங்கு மறுமணம் செய்து கொண்டதாகக்கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர் என்பவர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது மனைவி சமர் முகமது அபு என்பவர் வேறொரு பெண்ணின் பாஸ்போர்ட் மூலமாக தனது குழந்தைகளுடன் துருக்கி சென்றுவிட்டதாக தெரிகிறது. மேலும், அவருக்கு தேவையான உதவிகளை ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
துருக்கியில் அவர் தனது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த நிலையில் சமர் முகமது அபு தற்போது அங்கேயே மறுமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் யாரை மறுமணம் செய்து கொண்டார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.