அமெரிக்காவுக்கு வாங்க.. அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடுங்கள்: புதிய H-1B விசா கொள்கை

Siva
வியாழன், 13 நவம்பர் 2025 (08:54 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புதிய H-1B விசா கொள்கை குறித்து நிதி செயலர் ஸ்காட் பெசென்ட் விளக்கமளித்துள்ளார். இந்த கொள்கை நிரந்தர வெளிநாட்டு சார்பை குறைத்து, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வந்து, அமெரிக்க பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டது என்று அவர் தெரிவித்தார்.
 
"செமிகண்டக்டர் மற்றும் கப்பல் கட்டும் போன்ற துறைகளில் அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, வெளிநாட்டு தொழிலாளர்கள் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை தங்கி பயிற்சி அளிப்பார்கள். அதன் பிறகு அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுவிடலாம். பின்னர், அமெரிக்கத் தொழிலாளர்கள் அந்த பணிகளை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள்," என்று அவர் விளக்கினார்.
 
மேலும், ஆண்டுக்கு $100,000 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு சாத்தியமான $2,000 டாலர் வரியில் சலுகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும்  அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?

மோடி எங்கள் டாடி.. நாங்கள் சொன்னால் கேட்பார்: ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் 78% SIR படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments