Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுற்றுலா வருபவர்களுக்கு இலவச விமான டிக்கெட்! - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தாய்லாந்து

Advertiesment
Thailand Tourism

Prasanth K

, புதன், 24 செப்டம்பர் 2025 (09:42 IST)

சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் நோக்கில் தங்களது நாட்டிற்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு உள்நாட்டு விமான சேவையை இலவசமாக அறிவித்துள்ளது தாய்லாந்து.

 

தாய்லாந்து அரசு செப்டம்பர் முதல் நவம்பர் வரை Free Thailand Domestic Flights என்னும் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச விமான டிக்கெட் பெற்று தாய்லாந்து நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக உள்நாட்டு விமான பயண டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, சர்வதேச சுற்றுலா பயணிகள் 2 பயணம் அல்லது 1 ரவுண்ட் ட்ரிப்க்கான இலவச விமான டிக்கெட்டை பெற முடியும். இலவச டிக்கெட்டுகளுக்கான தொகை ஒரு வழி பயணத்திற்கு 1750 பாஹ்த், ரவுண்ட் ட்ரிப்புக்கு 3500 பாஹ்த் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

இந்த சலுகையை பெற சர்வதேச விமான டிக்கெட் புக் செய்பவர்கள், ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், ட்ராவல் ஏஜென்சிகள், மல்டிசிட்டி ஆப்ஷன்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய போரை ஊக்குவிப்பதே இந்தியாதான்.. புதின் நட்பில் எந்த பயனும் இல்லை! - ட்ரம்ப் ஆதங்கம்!