நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இன்று (ஆகஸ்ட் 5) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கையை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழையால் ஏதேனும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால், பொதுமக்கள் உடனடியாக தொடர்புகொள்ளக் கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077
வாட்ஸ்அப் எண்: 9488700588
பிற எண்கள்: 0423 2450034, 0423 2450035