பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், தனது 60வது வயதில் ஒன்பதாவது முறையாக தந்தையாகியுள்ளார். அவரது மனைவி கேர்ரி ஜான்ஸனுக்கு, மே 21ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பாப்பி எலிசா ஜோஸபைன் ஜான்ஸன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
போரிஸ் – கேர்ரி ஜோடியின் இது நான்காவது பிள்ளை. அவர்கள் 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்ஸ்டாகிராமில் தனக்கு குழந்தை பிரந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள போரிஸ், “இந்த அழகான சிறுமியை நம்பவே முடியவில்லை. மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
குழந்தையுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். “எங்கள் குடும்பத்தில் கடைசி குட்டி வந்துவிட்டாள்” என கேர்ரி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், போரிஸ் ஜான்ஸனுக்கு, அவரது முன்னாள் மனைவி மரினாவுடன் நான்கு பிள்ளைகளும், காதலி ஹெலன் மெசின்டைருடன் ஒரு பிள்ளையும் உள்ளனர். தற்போது பாப்பி பிறப்பதுடன், அவர் ஒன்பதாவது முறையாக தந்தையாகி இருக்கிறார்.
இந்த செய்தி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.