அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, பிரிட்டனும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து வெளியேற்றி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து, இந்தியர்கள் உள்பட பல நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டனின் பிரதமர் கேர் ஸ்டார்மர் என்ற அமைப்பின் தலைமையில், அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்த 19,000 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், இன்னும் வெளியேற்றும் பணி தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், பிரிட்டன் முழுவதும் உணவகங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், வணிக வளாகங்கள், வாகனம் தூய்மை செய்யும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், இந்தியர்கள் உள்பட பலர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அகதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து, ஆவணங்களை சரிபார்த்த பின்னர் அவர்களின் நாட்டிற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.