Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமலா ஹாரிசுக்கு பிரபல பாப் பாடகர் ஆதரவு.! குழந்தை தருகிறேன் என கொச்சைப்படுத்திய எலான் மஸ்க்.!!

Advertiesment
Elon Musk

Senthil Velan

, புதன், 11 செப்டம்பர் 2024 (13:38 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு தான் எனது வாக்கு என தெரிவித்த பிரபல அமெரிக்க பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் குறித்து எலான் மஸ்க் போட்ட ட்விட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.   தேர்தலை ஒட்டி கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்ப் இடையே நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசிய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், ட்ரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது என்று குற்றம் சாட்டினார். நான் அதிபரானால் அந்த நிலை மாற்றப்படும். அமெரிக்காவில், வாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புகிறேன் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

webdunia
அனல் பறந்த விவாதம்:
 
இதனை மறுத்த ட்ரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் தான் அமெரிக்கப் பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்தது என்றார். இந்த விவாதத்துக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு தான் எனது வாக்கு என பிரபல அமெரிக்க பாப் சிங்கர் டெய்லர் ஸ்விஃப்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் உங்களைப் போல நானும் இரவு நடந்த விவாதத்தை பார்த்தேன். நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கிறேன் என்றும் ஏனென்றால் அவர் உரிமைகளுக்காக போராடுகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
 
டெய்லர் ஸ்விஃப்ட்டின் ஆதரவை விமர்சிக்கும் வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்,  நீங்கள் வெற்றி பெற்றால் நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருவேன் என்றும் மேலும் பூனைகளை எப்போதும் பாதுகாப்பேன் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எலான் மஸ்க்கின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்புக்கு, எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதிகள் விடுதலை விவகாரம்.! எப்படி நிராகரிக்க முடியும்.! ஆளுநருக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்.!!