பிரேசில் நாட்டில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு பிரதிநிதியை நியமிக்க சொல்லி காலக்கெடு விதித்துள்ளது பிரேசில் உச்சநீதிமன்றம்.
உலகம் முழுவதும் ட்விட்டர் என்ற பெயரில் பிரபலமாக இருந்த தளத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கிய நிலையில், அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றினார். அதன் பின்னர் அதில் ப்ளூடிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும், ஊழியர்கள் பணி நீக்கம் என தொடர்ந்து பல மாறுதல்களை செய்து வந்தார் எலான் மஸ்க்
சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தள செயல்பாடுகள் மீது தணிக்கை உத்தரவுகள் விதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எக்ஸ் தளத்தின் பிரேசில் நாட்டு அலுவலகத்தை மொத்தமாக மூடிய எலான் மஸ்க் ஊழியர்களையும் நீக்கியது கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. ஆனால் எக்ஸ் தளம் பிரேசிலில் எப்போதும் போலவே இயங்கும் என எலான் மஸ்க் அறிவித்திருந்தார்
இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கை விசாரித்த பிரேசில் உச்சநீதிமன்றம், எக்ஸ் நிறுவனம் அடுத்த 24 மணி நேரத்திற்கு பிரேசில் நாட்டிற்கான எக்ஸ் நிறுவன பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முழுமையாக முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K