பாலியல் உணர்வை தூண்டும் காளான் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் நிலையில், இதனை வாங்குவதற்காக இளைஞர்கள் பலர் படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இமயமலை பகுதியில் வளரும் அந்துப்பூச்சிகளில் உள்ள லார்வாக்களில் வளரும் பூஞ்சை காளான்கள் பாலுணர்வை தூண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், இதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதன் விலை ஒரு பவுண்டுக்கு சுமார் 1.17 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பூஞ்சை காளானை வாங்குவதற்கு சீனாவுக்கு பல பணக்காரர்கள் படை எடுப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் இதை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க சந்தைகளில் இதே போன்ற பூஞ்சை காளான்கள் விற்பனை ஆனாலும், அவை பெரும்பாலும் போலியாக இருப்பதாகவும், நேரடியாக சீனாவுக்குச் சென்று வாங்குவதில்தான் நல்ல பலன் கிடைப்பதாகவும் பல இளைஞர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இந்த பூஞ்சையை தேடுவதையே முழுநேர வேலையாக நேபாளத்தில் உள்ள பலர் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.