Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விநாயகர் சிலை குறித்து கேள்வி கேட்ட எலான் மஸ்க்.. Grok கூறிய அசத்தலான பதில்..!

Advertiesment
எலான் மஸ்க்

Siva

, செவ்வாய், 11 நவம்பர் 2025 (13:34 IST)
எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் உருவாக்கிய Grok என்ற AI சாட்பாட், விநாயகர் சிலையை மிக துல்லியமான விவரங்களுடன் அடையாளம் கண்டு விளக்கியது, சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
எலான் மஸ்க், தடைகளை நீக்கும் கடவுளான விநாயகரின்படத்தை வெளியிட்டு, "இது என்ன?" என்று Grok-ஐ கேட்டார்.
 
அதற்குப் பதிலளித்த AI, அதை சரியாக விநாயகர் சிலை என்று அடையாளம் கண்டது. "ஒற்றை கொம்புடன் கூடிய யானை தலை, மோதகம் ஏந்திய நான்கு கைகள், தாமரை அடிப்பீடம் மற்றும் காலடியில் உள்ள எலி" போன்ற பாரம்பரிய அம்சங்களை மிகத் துல்லியமாக விளக்கியது.
 
இந்த சிலை ஒரு "பாரம்பரிய தென்னிந்திய பாணி பித்தளைச் சிலை என்றும், இது தினசரி வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் குரோக் கூறியது.
 
கலாச்சார மற்றும் மத சின்னங்களை Grok AI இவ்வளவு விரிவாக புரிந்துகொண்டது குறித்து பயனர்கள் ஆச்சரியம் தெரிவித்தனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதிகாரர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.. பூடானில் இருந்து உறுதிமொழி கொடுத்த பிரதமர் மோடி..!