உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து வரும் நிலையில் பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதை ஏஐ உதவியுடன் தெரிந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாது மருத்துவம், கல்வி, பொருளாதாரம் என பல துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் ஏதாவது தகவல் தேட வேண்டியிருந்தால் கூகிளுக்கு செல்வதை தாண்டி, எல்லாமும் ஏஐயிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை வந்துவிட்டது.
அப்படியாக சமீபத்தில் ஒரு பெண் சாட் ஜிபிடியிடம் பேசி தனக்கு கேன்சர் இருப்பதை கண்டறிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரான்ஸை சேர்ந்த மார்லி என்ற பெண் சமீபமாக இரவில் அதிகமாக வியர்ப்பது, சருமத்தில் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்தபோதும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அவர் அதன் பின்னர் இதுகுறித்து சாட்ஜிபிடியிடம் பேசியுள்ளார். அது வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் மருத்துவரை அணுகியபோது அவருக்கு Hodgkin Lymphoma என்ற அரியவகை புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K