நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆர்யா 69 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும் அடித்தனர்.
இதனை அடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில் ஒரு ஓவர் மட்டுமே வீசியபின் மழை பெய்த. அதன் பின் மழை நிற்கவில்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
நேற்றைய போட்டிக்கு பின் பஞ்சாப் அணி நான்காவது இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் குஜராத், டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.