தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அருகே அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து நடந்ததை எடுத்து, பல முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் என்ற கட்டிடத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து என்ற தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சம்பவம் இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.
12 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த கட்டிடத்தில், அமலாக்கத்துறை அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த தீ விபத்தால் பல முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதம் அடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், கம்ப்யூட்டரில் ஆவணங்கள் சேவ் செய்து வைத்திருப்பதால், அவற்றை மீட்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்துக்கு காரணம் சதியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.