பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் மூன்று போலீசார் உயிரிழந்தனர்.
முதல் தாக்குதல்: முதலில், அப்பகுதியில் அமைந்திருந்த ஒரு காவல்துறை சோதனை சாவடியை குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரண்டாவது தாக்குதல்: இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீது, அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் மூன்று போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வாவின் ஹங்கு நகரில் நடந்த இச்சம்பவத்தில், படுகாயம் அடைந்த காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.