பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.
சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடிய மூன்று போட்டிகளையும் தோற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றமாக ஒரு நாள் போட்டிகளுக்கான அணிக் கேப்டன் முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஷாகீன் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முகமது ரிஸ்வான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு அரசியல் ரீதியானக் காரணம் உள்ளது என முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார். அதில் “பாலஸ்தீனத்துக்கு ஆதரவானக் கருத்தைத் தெரிவித்து அணிக்குள் மதக் கலாச்சாரத்தைப் பரப்புவதாகக் கூறிதான் ரிஸ்வான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.