Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

Advertiesment
Flight

Mahendran

, வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (14:51 IST)
அலாஸ்கா சென்று கொண்டிருந்த அமெரிக்க விமானம் திடீரென மாயமாகிவிட்டதாகவும், அந்த விமானத்தை தேடும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா என்ற பகுதியில் இருந்து, அமெரிக்க நேரப்படி நேற்று மதியம் 2:37 மணிக்கு, சிறிய ரக விமானம் ஒன்று 10 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், புறப்பட்ட 39 நிமிடங்களில், ரேடாரில் இருந்து தொடர்பு இழந்து மாயமானது என்றும், மாயமான விமானத்தை கண்டுபிடிக்க முயற்சியில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளை மலை என்ற பகுதியில் தான் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சந்தேகப்படும் அதிகாரிகள், அங்குள்ள உள்ளூர் மக்கள் உதவியுடன் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதக்கிறதா என்றும் தேடப்பட்டு வருகிறது.

மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களில், இரண்டு அமெரிக்க விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்களை சந்தித்த நிலையில், தற்போது ஒரு விமானம் திடீரென மாயமாகி இருப்பது, அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!