Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனே திரும்பி வா..! கதறி அழுத அரசர்! சவுதி அரேபியாவின் ‘Sleeping Prince’ காலமானார்!

Advertiesment
Sleeping Prince

Prasanth K

, திங்கள், 21 ஜூலை 2025 (10:07 IST)

சவுதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர் (Sleeping Prince)’ என்று அழைக்கப்பட்ட அல் வலீத் பின் கலீத் பின் தலால் தனது 36வது வயதில் காலமானார்.

 

சவுதி அரசக் குடும்பத்தின் மூத்த மகனான அல் வலீத் பின் கலீத் பின் தலால் கடந்த 2005ம் ஆண்டு தனது 15வது வயதில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கொடூரமான விபத்தில் சிக்கினார். பெரும் பொருட்செலவில் ஏராளமான மருத்துவர்களை வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உயிரை காப்பாற்ற முடிந்தாலும், சுயநினைவை மீட்க முடியவில்லை.

 

கோமாவில் வீழ்ந்த இளவரசரை எத்தனை ஆண்டு காலமானாலும் கவனித்துக் கொள்ள அரசர் முடிவு செய்தார். அதன்படி அவரை பலரும் பராமரித்து வந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து கோமாவிலேயே இருந்து வந்தார் இளவரசர். அதனால் அவர் சவுதி மக்களால் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 19ம் தேதியன்று இளவரசர் காலமானார்.

 

நேற்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்த மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடைஞ்சலாக இருந்த கணவன்! - மனைவி செய்த கொடூரம்!