Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

Advertiesment
ஹஜ் 2025

Mahendran

, திங்கள், 7 ஏப்ரல் 2025 (10:23 IST)
இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு சவூதி அரேபிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 
அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான குடும்ப மற்றும் வணிக விசாக்கள் ஹஜ் முடியும் வரை தற்காலிகமாக  நிறுத்தப்படுகின்றன.
 
இந்த முடிவு, கூடுதல் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 1000-க்கும் மேற்பட்டோர் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக உயிரிழந்தனர். இவர்களில் பலர் சட்டவிரோதமாக ஹஜ் பயணம் செய்தவர்கள் எனத் தெரிய வந்தது.
 
ஏப்ரல் 13 வரை விசா வழங்கல் தொடரும் என்றும், அதன் பின் ஹஜ் முடியும் வரை குறிப்பிட்ட நாடுகளுக்கு விசா தரப்படாது என்றும் அவுதி அரேபியா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், பதிவு இல்லாமல் ஹஜ் பயணம் செய்ய முயற்சிப்பவர்களைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டவை என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!