’நாய்’ மீது பாசம் பொழியும் ’ பூனை’ ... நீங்களே பாருங்க ! வைரல் வீடியோ

செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:10 IST)
இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்குமே தனித்தன்மை உண்டு. அந்த வகையில்,பூனை மற்ற விலங்குகளைவிட மனிதர்களிடம் அதிகமாகப் பழகுகிறது. மனிதர்களும் செல்லமாக அதை வளர்க்கிறார்கள். 
அதேபோல் நாயும் வீட்டைக் காவல் காக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறது.அதனால் மனிதர்களின் செல்லமாகவும், நன்றியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், வெளிநாட்டில், ஒருவது வீட்டில், பூனை வளர்த்து வந்துள்ளார். அப்போது அவர் புதிதாக ஒரு நாயை வாங்கிவந்துள்ளார். பொதுவாகவே நாயும், பூனையும் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்ளும். ஆனால் இண்ட இவரது வீட்டில் இருக்கும் நாயும் பூனையும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். அப்போது, தன் குட்டியைப் போல் நினைத்து அந்தப் நாயை அரவணைத்து தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டது. இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.
 

I think my cat loves the newest member of the family pic.twitter.com/OyVf797dru

— Awwwww (@AwwwwCats) November 17, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பள்ளி வாகனத்தை மோதிய பேருந்து! அடித்து நொறுக்கிய மக்கள்!