Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி வாகனத்தை மோதிய பேருந்து! அடித்து நொறுக்கிய மக்கள்!

Advertiesment
பள்ளி வாகனத்தை மோதிய பேருந்து! அடித்து நொறுக்கிய மக்கள்!
, செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:07 IST)
திருச்சி அருகே பள்ளி வாகனத்தை பேருந்து மோதியதால் குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் சமயபுரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்த பக்கமாக வந்த தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்து பள்ளி வேனில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் வலதுபுறம் முற்றிலும் சிதைந்தது.

பள்ளி வேனை ஓட்டி வந்த வில்லியம் டிரைவர் மற்றும் 4 குழந்தைகள் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதுமே தனியார் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தனியார் பேருந்தை அடித்து நொறுக்கினர்.

இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விழாவில் ’நாற்காலி’யால் அடித்துக் கொண்ட இளைஞர்கள் ... பரவலாகும் வீடியோ