Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி… தன்னார்வலர் பலியால் அதிர்ச்சி!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி… தன்னார்வலர் பலியால் அதிர்ச்சி!
, வியாழன், 22 அக்டோபர் 2020 (10:20 IST)
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட தன்னார்வலர் ஒருவர் பலியாகியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சில மருந்துகள் ஆரம்ப கட்டங்களை தாண்டி இப்போது மனித பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளன. இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி இப்போது மனிதப் பரிசோதனைக் கட்டத்தை எட்டியுள்ளது.

தன்னார்வலர்களுக்கு இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பிரேசிலின் ரியோ டிஜெனிரோவைச் சேர்ந்த மருத்துவர் ஜோனோ ஃபீடோசா (28) என்ற தன்னார்வலர் உயிரிழந்துள்ளார்.  அவர் ஒரு மருத்துவர் என சொல்லப்படுகிறது. பிரேசிலில் இதுவரை சுமார் 8,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, உலகளவில் 20,000 க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசோதனை நடக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வில் ஆதரவும் இல்ல; எதிர்ப்பும் இல்ல! – மையமாக நழுவிய உதயகுமார்!