பிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் பல கொரோனாவை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ரஷ்யா இரண்டு கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேசமயம் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசியியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அதேவேளையில் அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதேபோல தன்னார்வலர் எந்த அளவிலான தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் எனவும் தகவல் வெளியிடப்படவில்லை.