பிரேசில் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிகபட்ச வரியால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, இனி அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், மாறாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்களுடன் பேச போவதாகவும் கூறி இருக்கிறார். இது சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, பிரேசில் மீது 40% வரை கூடுதல் வரி விதித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடும் கோபத்தில் உள்ள பிரேசில அதிபர் இதுகுறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் பேச போவதாக லூலா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த திடீர் வரி விதிப்புக்கு இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அமெரிக்காவுக்கு எதிராக அணிதிரள வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.