ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது அமெரிக்கா - இந்தியா உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எதிரி நாடான சீனாவுக்கு சலுகை அளித்துவிட்டு, இந்தியா போன்ற நட்பு நாட்டுடனான உறவைச் "சிதைக்க" வேண்டாம் என்று அவர் டிரம்ப்பை வலியுறுத்தினார்.
ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் மிகப்பெரிய எதிரி நாடு சீனா . ஆனால், சீனா மீதான வரிகளை 90 நாட்களுக்கு அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. சீனாவுக்குச் சலுகை அளித்துவிட்டு, இந்தியா போன்ற ஒரு வலுவான நட்பு நாட்டுக்கு வரி விதிப்பதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிரம்ப்பின் இந்த அணுகுமுறை, சீனா போன்ற சர்வாதிகார சக்திகளை எதிர்கொள்ள, இந்தியா போன்ற ஜனநாயக நட்பு நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது அவசியம் என்று குடியரசு கட்சியினர் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.