மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

Siva
வியாழன், 12 ஜூன் 2025 (08:19 IST)
இந்தியாவில் தங்கியிருக்கும் முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கதேச மக்களிடம் பேசக்கூடாது, எனவே அவரைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், அதை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டதாக வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
லண்டன் சென்றுள்ள வங்கதேச பிரதமர் முகமது யூனுஸ், "மோடியுடன் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஷேக் ஹசீனாவை இந்தியாவில் வைத்திருப்பது உங்கள் விருப்பம், ஆனால் அவர் சமூக வலைத்தளத்தில் பேசுவதை நிறுத்த சொல்ல வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர், சமூக வலைத்தளத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டார்," என்று தெரிவித்தார்.
 
"ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி இந்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அவர் செய்த குற்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் பல குற்றங்கள் விசாரணையில் தெரியவரும் என்றும்," அவர் கூறினார். "இந்தியா எங்கள் அண்டை நாடு. நாங்கள் அவர்களுடன் எந்த பிரச்சனையிலும் இருக்க விரும்பவில்லை," என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments