திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

Siva
புதன், 11 ஜூன் 2025 (20:20 IST)
தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் இருக்கும் அதிருப்தியாளர்கள் விஜய் கட்சிக்கு வருவார்கள் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் கட்சி களமிறங்க இருக்கும் நிலையில், ஏற்கனவே விஜய் கட்சியில் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
 
இந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் விஜய் கட்சிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அவர்களால் விஜய் கட்சிக்கு எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும், அருண் ராஜ், ஐ.ஆர்.எஸ்.  பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு விஜய் கட்சிக்கு வந்திருக்கிறார் என்றால், அவருக்கும் விஜய்க்கும் பத்தாண்டு காலம் நெருங்கிய நட்பு என்றும், விஜய்க்கு வருமானவரித் துறை சோதனை வந்தபோதெல்லாம் அவர்தான் காப்பாற்றினார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சராகிறாரா முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்? பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

மகள் இறந்த துயரம்.. ஆம்புலன்ஸ் முதல் இறுதிச்சடங்கு வரை லஞ்சம்.. ஒரு தந்தையின் ஆத்திரமான பதிவு..!

சென்னையில் திடீரென இடிந்து விழுந்த ரேசன் கடை.. பெண் விற்பனையாளர் படுகாயம்..!

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் மூவரும் திமுகவின் ‘பி’ டீம்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments