இந்தியாவுடனான போரில் தாங்கள் வென்றுவிட்டதாக மார்த்தட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளை தாக்கியது. இதனால் இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்களையும் இந்தியா முறியடித்தது, இந்த மோதலின் எதிரொலியாக சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் தனது வான் எல்லையை மூடியது.
இந்த போரில் இந்தியாவின் ரஃபேல் உள்ளிட்ட விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து பல இடங்களில் கூறி வருவதுடன், போரிலும் தாங்கள் வெற்றிப்பெற்றதாக கூறிக் கொண்டது.
துருக்கி ஈரான் நாடுகளுக்கு பயணம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசியுள்ளார். ஈரான் அதிபருடனான சந்திப்புக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “காஷ்மீர் பிரச்சினை மற்றும் நதிநீர் பங்கீடு பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். மேலும் வணிகம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்தும் அண்டை நாடுகளுடன் பேச நாங்கள் தயார்.
இந்த சமாதான முன்மொழிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா உண்மையிலேயே அமைதியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுவார்கள். இந்தியாவுடனான போரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K