Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேகே ரவ்லிங்க்கிற்கு கொலை மிரட்டல்?

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (10:03 IST)
ஜேகே ரவ்லிங்க்கிற்கு கொலை மிரட்டல் விடுத்து டிவிட் செய்துள்ள நபரால் பரபரப்பு.


உலகின் மிக பிரபலமான எழுத்தாளராக அறியப்படுபவர் சல்மான் ருஷ்டி. இவரது கனவின் குழந்தைகள் என்ற புத்தகம் பெரும் வரவேற்பை பெற்ற அதே சமயம் பல விமர்சனங்களையும், கொலை மிரட்டல்களையும் சல்மான் ருஷ்டிக்கு பெற்று தந்தது.

சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மேடைக்கு வந்த நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் படுகாயத்தில் சல்மான் ருஷ்டியின் கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கண் பார்வையை இழக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஹாறி பாட்டர் எழுத்தாளர் ஜேகே ரவ்லிங் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து, அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன். அவர் நலமுடன் இருக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.

ஜேகே ரவ்லிங் டிவிட்டர் பதிவிற்கு கீழே, மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டிவிட்டர் கணக்கு கொண்ட நபர், கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான் என கொலை மிரட்டல் விடுத்து டிவிட் செய்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஜேகே ரவ்லிங்கிற்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments