Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்துக்குத்து! – பார்வையை இழக்கும் அபாயம்!

Advertiesment
Salman Rusdie
, சனி, 13 ஆகஸ்ட் 2022 (09:25 IST)
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்ம நபர் கத்தியால் குத்திய நிலையில் அவர் பார்வையை இழக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் மிக பிரபலமான எழுத்தாளராக அறியப்படுபவர் சல்மான் ருஷ்டி. இவரது கனவின் குழந்தைகள் என்ற புத்தகம் பெரும் வரவேற்பை பெற்ற அதே சமயம் பல விமர்சனங்களையும், கொலை மிரட்டல்களையும் சல்மான் ருஷ்டிக்கு பெற்று தந்தது.

சல்மான் ருஷ்டி நேற்று நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மேடைக்கு வந்த நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். தாக்கிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் படுகாயத்தில் சல்மான் ருஷ்டியின் கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கண் பார்வையை இழக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன உளவு கப்பலுக்கு இந்தியா கண்டனம்! – கடலிலேயே நிறுத்தி வைத்த இலங்கை!