Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காளி போஸ்டர் சர்ச்சை: லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Advertiesment
காளி போஸ்டர் சர்ச்சை: லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
, புதன், 6 ஜூலை 2022 (13:47 IST)
லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 
தமிழில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கி வருபவரும், சமூக செயற்பாட்டாளருமாக இருந்து வருபவர் லீனா மணிமேகலை. இவர் தற்போது “காளி” என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். நாடக பாணியிலான இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
 
அதில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கோடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து லீனா மணிமேகலை மீது டெல்லி, உத்திரப் பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்கிற கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார் சரஸ்வதி. லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த காணொளியை தன்னுடைய முகநூல் கணக்கில் நேற்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன்: ஐஸ்வர்யா ராயின் ‘நந்தினி’ கேரக்டரின் போஸ்டர்