அமெரிக்காவில் திடீர் தீ விபத்து: சிறு குழந்தைகள் பலியான சோக சம்பவம்

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (08:38 IST)
அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பரமாரிப்பு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 5 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறார் இளம்பெண் ஒருவர். இவருக்கு பிறந்து 8 மாதங்களே ஆன கைக்குழந்தையும் உள்ளது. வேலைக்கு செல்லும் பெற்றோர் இந்த பராமரிப்பு மையத்தில் தங்களது குழந்தைகளை விட்டு செல்வது வழக்கம்.

கடந்த 10ம் தேதி இரவு பராமரிப்பு மையத்தில் எட்டு குழந்தைகள் தூங்கி கொண்டிருத்திருக்கின்றனர். தனது எட்டு மாத குழந்தையுடன் மையத்தை நடத்தி வரும் பெண்ணும் தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர்கள் இருக்கும் மூன்றாவது தளத்தில் திடீரென தீ பிடித்துள்ளது.

உடனடியாக குழந்தைகளை காப்பாற்ற அந்த பெண் முயற்சித்துள்ளார். 4 குழந்தைகளை இரண்டாவது தளத்துக்கு குதிக்க செய்து காப்பாற்றியுள்ளார். அதற்குள் தீ முழுவதுமாக பரவவே 8 மாதக் குழந்தையுடன் 4 சிறுவர்களும் உயிரிழந்தனர்.

வேகமாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பலத்த தீ காயங்களுடன் கிடந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாடியில் இருந்து குதித்த 4 சிறார்களும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

நள்ளிரவில் நடந்த இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மன்மோகன்சிங் இன்று வேட்புமனு தாக்கல்: மீண்டும் ராஜ்யசபா எம்பி ஆகிறார்