அமெரிக்காவிலும் பரவியது ஹிந்தி – வகுப்புகள் எடுக்கும் இந்திய தூதரகம்

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (14:54 IST)
ஹிந்தியை வளர்க்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஹிந்தி பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹிந்தியை வளர்ப்பதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழகத்தில் சில மாதங்களுக்கு முன் ஒருநாள் ஹிந்தி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் 7 நாடுகளை சேர்ந்த 87 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து தற்போது ஆறு வாரம் நடைபெறும் ஹிந்தி வகுப்புகளை பல்கலைகழகத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த வகுப்புகளை இந்திய கலாச்சார தூதராக பணியாற்றி வரும் மோக்ஸ்ராஜ் நடத்த இருக்கிறார். இந்த ஹிந்தி வகுப்புகள் இந்த மாத இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 5 ஜி ஒப்பந்தம்.... ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு ?