அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் கழிவறையில், கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் பயணிகள் அதிர்ந்து போயினர்.
அமெரிக்காவின் சான் டெய்கொவிலிருந்து ஹாஸ்டன் வரை சென்றுகொண்டிருந்த யூனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில், ஒரு பெண் பயணி ஒருவர் கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது கழிவறையின் உள்ளே ஒரு ஓரத்தில் ஒரு வித்தியாசமான கருவி தென்பட்டுள்ளது. அந்த கருவியில் ஒரு புள்ளி அளவிலான ஒளி அமந்து அமந்து எரிந்துள்ளது. சந்தேகப்பட்ட பெண் பயணி, அந்த கருவியை கைப்பற்றி விமான ஊழியர்களிடம் கொடுத்துள்ளார்.
ஹாஸ்டனில் விமானம் தரையிரங்கியவுடன், விமான நிறுவனத்தினர் அந்த கருவியை எஃப்.பி.ஐயிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த கருவியை ஆராய்ந்த எஃப்.பி.ஐ. அது ஒரு படம்பிடிக்கும் கேமரா என்று கண்டறிந்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட விமான பயணிகள் அதிர்ந்து போயினர்.
உடனே சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த அதிகாரிகள், கடந்த மே 5 ஆம் தேதி அதே விமானத்தில் பயணித்த, சூன் பிங் லீ என்ற மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் தான், கழிவறையில் கேமராவை பொருத்தியதாக கண்டுபிடித்தனர். பின்பு அவரை கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டார். அவருக்கு 12 மாத சிறை தண்டனை வழங்கினார் நீதிபதி. இச்சம்பவம் விமாணப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.